Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரோபோ ஷங்கரின் உடல்நலம் குறித்து பேசிய மகள் இந்திரஜா!! உடல் மெலிந்ததற்கு காரணம் இதுதான்!!

Robo Shankar's daughter Indraja spoke about his health!! This is the reason why the body is thin!!

Robo Shankar's daughter Indraja spoke about his health!! This is the reason why the body is thin!!

ரோபோ ஷங்கரின் உடல்நலம் குறித்து பேசிய மகள் இந்திரஜா!! உடல் மெலிந்ததற்கு காரணம் இதுதான்!!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரோபோ ஷங்கரின் மெலிந்த தோற்றம் இணையதளத்தில் வைரலானது. இதற்கு பலரும் பல காரணங்களை கூறி வந்தனர்.

தற்போது ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா தந்தையின் உடல்நல பாதிப்புக்கான காரணங்களை கூறி உள்ளார். ரோபோ ஷங்கர் தமிழில் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் சின்னத்திரையில் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தனது திறமையை வெளிக்கொண்டு பிறகு வெள்ளித்திரைக்கு வந்தவர். தற்போது பல தமிழ் திரைப்படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து வந்தார்.

இவர் விஜய் சேதுபதியுடன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, தனுசுடன் மாரி மற்றும் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தனது திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக இருந்த ரோபோ ஷங்கர் சில நாட்களுக்கு முன்பாக மிகவும் மெலிந்து காணப்பட்டார். இதனால் ரசிகர்கள் மத்தியிலும் திரைத்துறையினர் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.

இவரின் உடல்நல பாதிப்பிற்கு பல காரணங்களை அனைவரும் கூறி வந்தனர். இவருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதாகவும் பலர் கருத்துக்களை கூறி வந்தனர். இது குறித்து நிறைய வதந்திகளும் பரவ தொடங்கியது. தற்போது அவர் உடல்நல பாதிப்பிலிருந்து மெதுவாக மீண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா தனது தந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவுப் பற்றி பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பது, தனது தந்தை சில மாதங்களுக்கு முன்பு மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். இதன் காரணமாக அவருக்கு சில காலமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி உள்ளார்.

ஆனால் இப்போது அதை முற்றிலும் மறந்து ஆரோக்கியமான வாழ்க்கையை அவர் வாழ தொடங்கியதாக கூறி உள்ளார். மேலும் இது போன்ற தீய பழக்கங்களில் இளைஞர்களும், பெரியவர்களும் ஈடுபட வேண்டாம் என்றும் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா கூறி உள்ளார்.

Exit mobile version