இந்திய அணி ஆஸ்திரேலியா தொடரை சமீபத்தில் விளையாடி முடித்தது. இந்த தொடரில் மோசமான ஒரு தோல்வியை சந்தித்தது இந்திய அணி இந்த தொடரில் இந்திய் அணி 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்ல முடியும் என்ற கட்டாயத்தில் இருந்தது.
ஆனால் இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்றது. மேலும் இந்திய அணி தோல்விக்கு முக்கிய காரணமாக ரோஹித் சர்மா கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார். அவர் இந்த தொடரில் 5 இன்னிங்ஸில் விளையாடி 32 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். மேலும் யாவர் 6 வது வரிசையில் இறங்கினார் அதன் பின் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கினார். அனால் எந்த வரிசை மாற்றமும் பலன் அளிக்கவில்லை.
இந்நிலையில் நேரலையில் பேசிய ஆஸ்திரேலிய வீரர் சைமன் கட்டிச் ரோஹித் சர்மாவை வருங்காலத்தில் அவருக்கு ஸ்டாண்டப் காமெடி யில் நல்ல காலம் இருக்கிறது என்று கேலி செய்துள்ளார். மேலும் அவர் ஓய்வு குறித்து எந்த தகவலும் கூறாத நிலையில் அடுத்து விளையாட உள்ள இங்கிலாந்து தொடரில் அவர் யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.