cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் ரோஹித் மிகவும் சுயநலமாக நடந்து கொண்டார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி உலக டெஸ்ட் போட்டிதொடருக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது.
ஆனால் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா நியூசிலாந்து தொடர்ந்து ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்று வரும் தொடரிலும் சொதப்பி வருகிறார். இந்த ஆஸ்திரேலியா தொடரில் முதல் போட்டியில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. அதனால் இந்திய அணிக்கு கேப்டனாக பும்ரா விளையாடினார். தொடக்க வீரராக கே எல் ராகுல் விளையாடினார். எனவே ரோஹித் இரண்டாவது போட்டியில் விளையாடியும் 6 வது வரிசையில் களமிறங்கினார்.
இந்நிலையில் நேற்று தொடங்கிய 4 வது போட்டியில் இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து இன்று களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் அவர் 3 ரன்களில் ஆட்டமிழந்து சென்றார். மேலும் அடுத்து களமிறங்கிய கே எல் ராகுல் 24 ரன்களில் ஆடமிழந்தார்.
இதனை பல கிரிகெட் வல்லுனர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முன்னாள் வீரர் மஞ்சரேக்கர் கூறுகையில் கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இணைக்கு எந்த சிக்கலும் ஏற்படாது என கூறி ஆனால் ஆட்டம் தொடங்கிய பின் அவர் தொடக்கத்தில் களமிறங்கியது தவறான ஒன்று என்று கூறியுள்ளார்.