இந்திய அணியின் முக்கிய ஜாம்பவான்களில் ஒருவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின் அவர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின் நடுவே தனது ஓய்வை அறிவித்து உள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மனம்திறந்த ரோஹித் சர்மா.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் மூன்றாவது போட்டி முடிந்த பின் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அஸ்வின். இதுகுறித்து கூறிய ரோஹித் அவர் பெர்த் மைதானத்தில் முதல் போட்டியிலேயே அவர் ஓய்வு குறித்து தகவல் அடிபட்டது.
நாங்கள் தான் பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாட ஒப்புகொள்ள வைத்தோம். அவர் இந்திய அணிக்காக செய்யாத சாதனை என்று ஒன்றுமே இல்லை. நாங்கள் தொடக்கத்தில் சரியாக விளையாடாத போது அவர் டவுன் ஆர்டரில் இறங்கி அசத்தியுள்ளார். விக்கெட்டுகள் எடுத்தும் அவர் அசத்தியுள்ளார். கண்டிப்பாக அவரை மிஸ் செய்வோம்.
அதே சமயம் அவர் எடுக்கும் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவர் இந்த முடிவை எடுக்கும் முன் அதிகமாக யோசித்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறார். அவருடன் 2010 இருந்து இணைந்து விளையாடி வருகிறேன் அவரை போல ஒரு போட்டி வின்னரை நான் பார்த்ததே இல்லை என்று அவர் கூறினார்.