இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 5 டெஸ்ட் போட்டி தொடர்கள் நடைபெறவுள்ளது. அதில் முதல் போட்டி நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாவது போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது பகலிரவு பிங்க் பால் போட்டியாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்யும்போது அங்கு காண வரும் ரசிகர்கள் அவர்களுக்கு இடையூறாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணி பயிற்சி செய்யும் போது 70 பேர் தான் காண வருகின்றனர். ஆனால் இந்திய அணி பயிற்சி செய்யும் போது 3000 க்கும் மேற்பட்டோர் காண வருகின்றனர்.
அவ்வாறு வரும் ரசிகர்கள் இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய வீரர்களின் உடல் பருமனை கேலி கிண்டல் செய்தும் வருகின்றனர். இதனால் இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சி மேற்கொள்ள இடையூறாக இருப்பதால் பிசிசிஐ பயிற்சி நேரங்களில் காண தடை விதித்தது.
மேலும் காண வரும் ரசிகர்கள் பயிற்சி போட்டியை நேரலை செய்தும் வருகின்றனர். இதனால் இந்திய வீரர்கள் விரைவாக பயிற்சியை முடித்து திரும்பினர் என்று கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ தனது எதிர்ப்பை தெரிவித்த நிலையில் பல ஊடகங்கள் வழக்கம் போல் பயிற்சி கண்டு களிக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. இதை காண வருவோர் அதிகபட்சமாக இந்திய ரசிகர்கள் தான் என கூறப்படுகிறது.