cricket: இந்திய அணி மீது ரோஹித் சர்மாவுக்கு அக்கறை என்பது இல்லை அதனால் தான் நிதானம் இல்லாமல் விக்கெட் இழக்கிறார் ரசிகர்கள் கடுமையான விமர்சனம்.
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் நான்காவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கி 3 ரன்களில் ஆட்டமிழந்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியுள்ளார். அதனால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார்.
ஏற்கனவே இவர் கடந்த நியூசிலாந்து தொடர் முதற்கொண்டு சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதிய முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை அதனால் தொடக்க வீரராக கே எல் ராகுல் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் அடுத்து விளையாடிய இரு போட்டிகளில் ரோகித் சர்மா 6 வதாக களமிறங்கினார். ஆனால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை அதனால் மீண்டும் இன்று தொடங்கிய போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கினார்.
ஆனால் வழக்கம் போல் 3 ரன்களில் ஆட்டமிழந்து வந்த வேகத்திலேயே மீண்டும் பெவிலியன் திரும்பினார். இது இந்திய ரசிகர்களின் கடும் கோபத்தை தூண்டியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அவருக்கு அணியின் மீது எந்த அக்கறையும் இல்லை அதனால் தான் நிதானமாக தாக்குபிடிக்காமல் ஆட்டமிழக்கிறார் என்று கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.