cricket: திடீரென திட்டத்தை மாற்றிய ரோஹித் சர்மா. அவருக்கு பதிலாக களமிறங்கபோகும் கே எல் ராகுல்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22 தொடங்க உள்ளது. இந்தியா நியூசிலாந்து இடையிலான படுதோல்விக்கு பிறகு இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் இரண்டு பேட்சுகளாக ஆஸ்திரேலியா பயணம் சென்று பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். அதில் முதல் பேட்ச் நேற்று ஆஸ்திரேலியா சென்றது. அதில் கேப்டன் ரோகித் சர்மா செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று முன் தினம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா பிசிசிஐ குழு நடத்திய மீட்டிங்கில் ஆறு மணி நேரம் விவாதம் மேற்கொள்ளப்பட்டது இதில் கடைசியாக இந்திய அணியுடன் ரோகித் சர்மா சென்று பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இந்நிலையில் ரோகித் சர்மா இவர்களுடன் ஆஸ்திரேலிய செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா இவர்களுடன் செல்லவில்லை.
ஏற்கனவே விராட் கோலி தனது குடும்பத்தினருடன் ஆஸ்திரேலியாவில் உள்ள நிலையில் இரண்டு பேட்சுகளாக ஆஸ்திரேலியா புறப்பட்டனர். இந்நிலையில் இவர்களுடன் ரோகித் சர்மா செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் செல்லவில்லை. மனைவியுடன் நேரம் செலவிட இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.
மேலும் ரோகித் சர்மாவுக்கு பதிலாக தொடக்க வீரராக கே எல் ராகுல் களமிறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. ரோகித் சர்மாவுக்கு பதில் திட்டமிடப்பட்ட அபிமன்யு ஈஸ்வரன் தொடர்ந்து போட்டிகளில் சொதப்பி வருவதால் அவருக்கு பதிலாக கே எல் ராகுல் களமிறங்குவார்.
ஏனெனில் கே எல் ராகுல் ஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடிய அனுபவம் உண்டு. அவர் பல போட்டிகளில் ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடி உள்ளார். அந்த அனுபவம் காரணமாக அவர் தொடக்க வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது