தோனியை பின்னுக்கு தள்ளி ஆப்பு அடிக்கும் ரோஹித்!! இலங்கை மேட்சை சாதகமாக்க சூப்பர் ஜான்ஸ்!!
தோனிக்கு அடுத்தபடியாக இந்திய கேப்டன் சி என்ற பட்டத்தை ரோகித் சர்மா பெறவில்லை. தற்பொழுது நடந்து முடிந்த t20 உலக கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் என அனைத்து போட்டிகளிலும் இறுதி கட்டத்திற்கு வரை அழைத்துச் சென்ற பெருமை அவரையே சாரும். அதேபோல உலக கோப்பையை கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா கைப்பற்றியுள்ளது. இதன் மகிழ்ச்சியானது அளவில்லாத ஒன்று.
இதனால் ரோகித் சர்மா தோனியின் இடத்தை நிரப்பிக் கொண்டே வருகிறார். அது மட்டுமின்றி இந்த உலகக் கோப்பை போட்டியுடன் ஓய்வை அறிவித்த ரோகித் சர்மா இனி ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்துள்ளார். தற்பொழுது இலங்கை அணியுடன் வரும் மாதம் மூன்று டெஸ்ட் மேட்ச் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது. இதில் ரோகித் சர்மா விளையாட உள்ளார்.
கட்டாயம் இதில் வெற்றி வாகை சூடுவார் என்று பெரும்பாலும் கூறுகின்றனர். ஏனென்றால் பல போட்டிகளில் கடந்த ஆண்டு வரை இறுதி கட்டத்தை கூட நெருங்க முடியாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அனைத்தையும் மாற்றி அமைத்துள்ளார். அதேபோல அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் கட்டாயம் கோப்பை வெல்ல ரோகித் சர்மா காரணமாக இருப்பார் என்றும் தற்பொழுது வரை வெற்றி வாகை சூடாத நிலையில் அதனையும் மாற்றி அமைப்பார் என பலரும் கூறுகின்றனர்.
தோனி தனது கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணியுடன் விளையாடியதில் 56 முறை வெற்றிவாகை சூடியுள்ளார். இதனின் அடுத்த கட்ட வரிசையில் ரோகித் சர்மா 54 என்ற எண்ணிக்கையில் உள்ளார். தற்பொழுது நடைபெறும் மூன்று ஒரு நாள் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றால் தோனியை பின்னுக்கு தள்ளிவிட்டு ரோகித் சர்மா அந்த இடத்தை பிடிப்பார்.