cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பை திட்டிய கேப்டன் ரோஹித் சர்மா.
இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் தற்போது விளையாடி வருகிறது. இந்திய அணி இந்த மூன்றாவது போட்டியில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் மூன்றாவது போட்டியானது கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த முதல் இன்னிங்ஸில் ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக ஆகாஷ் தீப் அணியில் இடம்பெற்று களமிறங்கினார்.
ஆகாஷ் தீப் 114 ஓவரை வீச வந்தார் அந்த ஓவரில் அவர் வீசிய ஒரு பந்து பிட்ச் க்கு வெளியே சென்றது. அந்த பந்தை விக்கெட் கீப்பர் தாவி பிடித்தார் இல்லை என்றால் அந்த பந்து பவுண்டரி சென்றிருக்கும். அந்த பந்து வீசிய பிறகு கேப்டன் ரோஹித் சர்மா ஆகாஷ் தீப்பை கடுமையாக சாடினார்.
அவர் மண்டைல எதாவது இருக்க இல்லையா என சைகை காட்டி திட்டியுள்ளார் அது நேரலையில் பதிவாகியுள்ளது. இதனை பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரோஹித் சர்மாவை விமர்சனம் செய்து வருகின்றனர். இது போன்று பந்து வழுக்கி ஒய்டு பந்து வீசுவது வழக்கம் தான் என்று கூறி வருகின்றனர்.