Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டி 20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள்… கோஹ்லியின்  சாதனையை முறியடித்த வீரர்!

டி 20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள்… கோஹ்லியின்  சாதனையை முறியடித்த வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நேற்றைய போட்டியில் ஒரு முக்கிய சாதனையை முறியடித்துள்ளார்.

இந்திய அணிக்காக டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரராக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தார் விராட் கோலி. சமீபத்தில் அவரின் அந்த சாதனையை ரோஹித் ஷர்மா முந்தினார். இருவருக்கும் இடையே 70 ரன்கள்தான் வித்தியாசம் என்பதால் மாறிமாறி இருவரும் இந்த சாதனையைக் கடக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா விராட் கோஹ்லியின் மற்றொரு முக்கிய சாதனையையும் முறியடித்துள்ளார். நேற்றைய போட்டியில் அவர் அடித்த அரைசதத்தின் மூலம் டி 20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் தலா 30 அரைசதங்களோடு இருந்த நிலையில் நேற்று 31 ஆவது அரைசதத்தை சேர்த்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் ரோஹித் ஷர்மா. இவர்கள் இருவருக்கும் அடுத்தடுத்த இடங்களில் பாபர் ஆசம், டேவிட் வார்னர் மற்றும் மார்ட்டின் கப்தில் ஆகியோர் உள்ளனர்.

Exit mobile version