Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நேற்றைய போட்டியில் கோலியின் முக்கிய சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!..

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மா கொரோனா தொற்றில் இருந்து மீண்டு நேற்றைய முதல் டி 20 போட்டியில் விளையாடினார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

இந்தியா, இங்கிலாந்து, அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. மூன்று ஆட்டங்கள் கொண்ட இந்த டி20 தொடரின் முதல் ஆட்டம் சவுத்தம்டவுனில் நேற்று இரவு 10.30 மணியளவில் தொடங்கியது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கினார்.  இந்த போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலியின் முக்கியமான சாதனை ஒன்றை அவர் முறியடித்துள்ளார். இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட கோலி தன்னுடைய முதல் 30 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் கடந்தார். ஆனால் ரோஹித் ஷர்மாவோ நேற்றைய போட்டியான 29 ஆவது இன்னிங்ஸில் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

ஆனால் இவர்கள் இருவரை விட பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 24 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Exit mobile version