Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆஸியின் வேகத்துக்கு அசராத இந்திய பேட்ஸ்மேன்கள் ; வேற லெவல் ரோஹித் !தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

ஆஸியின் வேகத்துக்கு அசராத இந்திய பேட்ஸ்மேன்கள் ;ரோஹித் அபார சதம் ! தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்ற இந்தியா தொடரையும் வென்றுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இன்று நடைபெற்று வரும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தான் தொடரை கைப்பற்ற முடியும்.

இந்நிலையில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதலில் தடுமாற்றத்தை சந்தித்தாலும் பிறகு நிதானித்து ஆடி வருகிறது. ஹிட்ஸ்மேன்களான ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னரை குறைந்த ரன்களிலேயே இந்தியா அவுட் ஆக்கிவிட்டதால் ஆஸ்திரேலியாவின் ரன் ரேட் வழக்கத்தை விட குறைந்துள்ளது.

ஆனாலும் அதன் பின் ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் லபுஷான் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி சரிவைத் தடுத்தனர். 54 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியேறினார் லபுஷான். ஆனாலும் தொடர்ந்து ஆடிய ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் தனது 9 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார். சிறப்பாக விளையாடிய அவர் 117 பந்துகளில் 100 ரன்களக் கடந்த அவர், 131 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.

அதன்  பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆக ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஜடேஜா இரண்டு விக்கெட்களும் குல்தீப் மற்றும் சைனி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அதன் பின் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் 19 ரன்களில் அவுட் ஆகி வெளியேற, அதன் பின் ரோஹித்தோடு கைகோர்த்தார் கேப்டன் கோலி. இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 197 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடி சதமடித்த ரோஹித் ஷர்மா 119 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பின் விராட் கோலியுடன் சேர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சதத்தை நெருங்கிய கோலி 89 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே கூட்டணி வெற்றிக்குத் தேவையான ரன்களை  ஓவர்களில் எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

Exit mobile version