“கடைசி 2 போட்டிகளில் ரோஹித் ஷர்மா விளையாடக் கூடாது…” பாகிஸ்தான் வீரர் கருத்து

0
148

“கடைசி 2 போட்டிகளில் ரோஹித் ஷர்மா விளையாடக் கூடாது…” பாகிஸ்தான் வீரர் கருத்து

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது ரோஹித் ஷர்மா முதுகுவலிப் பிரச்சனை காரணமாக பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

சில தினங்களுக்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த மூன்றாவது போட்டியின் போது இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா களத்தில் பேட்டிங் செய்யும் போது காயம் அடைந்தார். ரோஹித் 5 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார், ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் விளையாடிக் கொண்டிருந்த போது தசைப் பிடிப்பு காரணமாக வெளியேறியதாக சொல்லப்படுகிறது. ரோஹித் ஸ்டிரைக் எடுக்கவிருந்தபோது, ​​இந்திய பிசியோ கமலேஷ் ஜெயின் மைதானத்திற்கு ஓடி வருவதை கேமரா காட்டியது, நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, ரோஹித் அவரது முதுகைப் பிடித்துக் கொண்டு வெளியேறினார்.

இதுபற்றி இப்போது பாகிஸ்தான் முன்னாள் வீரர் தனிஷ் கனேரியா “ரோஹித் ஷர்மா அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட தேவையில்லை. அவர் இல்லாமல் போனால் இந்திய அணிக்கு பெரிதாக பாதிப்பு இருக்காது. ஆனால் ஆசியக் கோப்பை மற்றும் டி 20 உலகக்கோப்பையில் அவரின் பங்களிப்பு அணிக்கு தேவை.” எனக் கூறியுள்ளார்.

ரோஹித் ஷர்மா அடுத்த இரு போட்டிகளில் ஓய்வெடுத்துக் கொள்வார் எனத் தெரிகிறது. அப்படி அவர் விலகும் பட்சத்தில் அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு ரிஷப் பண்ட் வழிநடத்துவார் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே ரிஷப் பண்ட் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கேப்டனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே  தற்போது நடந்து வரும் டி 20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.