நிவாரண தொகையாக ரூ.10000 வழங்கப்படும்!! அரசாணை வெளியிட்ட முதல்வர்!!

0
101
Rs.10000 will be given as relief!! The Chief Minister issued the decree!!

நிவாரண தொகையாக ரூ.10000 வழங்கப்படும்!! அரசாணை வெளியிட்ட முதல்வர்!!

தற்பொழுது எந்த ஆண்டிலும் இல்லாத பருவ மழை இந்த ஆண்டு  அதிக அளவில் பெய்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இந்த பருவமழை தொடங்கிய நாள் முதல் இன்று வரை பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்ந்து கொண்டே வருவதால் பல பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது.

அந்த வகையில் தலைநகரமான டெல்லியில் 40 ஆண்டுகளாக இல்லாத பருவமழை இந்த ஆண்டு பெய்ந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு தீவிர மடைந்த இந்த பருவ மழையால் டெல்லி ,ஹரியானா ,பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற பகுதிகளில் வெள்ளபெருக்கு  ஏற்படும் அபயாம் உள்ளது.

ஏற்கனவே தலை நகரான டெல்லியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த வெள்ளபெருக்கதால் பல்வேறு குடும்பங்கள் தங்களது குடியிருப்புகளை இழந்து தவிக்கின்றனர்.

இந்த நிலையில் குடியிருப்புகளை இழந்து தவிக்கும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு டெல்லி மாநில அரசு நிவாரம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதன்படி வெள்ளபெருக்கதால் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்திற்கு  10000  ரூபாய் வழங்குவதாக அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

மேலும் வெள்ளபெருக்கத்தில் குடியிருப்புகளில் இருந்து அடித்து செல்லப்பட்ட அனைத்து ஆவணங்களும் அரசு சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

அந்த வகையில் பள்ளி குழந்தைகள் அவர்களின் உடமைகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் குடியிருப்புகளை இழந்து தவிக்கும் மக்கள் அனைவரும் சூழ்நிலை சரியாகும் வரை முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.