ஓட்டுக்கு ரூ 4000 வீட்டுக்கு ஓர் குக்கர்.. வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய திமுக!! ஈரோடு தேர்தலில் தொடர் பரபரப்பு!1
தமிழக சட்டமன்ற தேர்தலை விட ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் தான் நாளுக்கு நாள் பரப்பரப்பை ஏற்படுத்தி அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்கிறது. அந்த வகையில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஈடுபட்ட பொழுது அப்பாவி மக்கள் அவர்களின் வறுமையை உபயோகம் செய்து அழைத்து வந்து ஆடுகளை பட்டியலில் அடைத்து வைப்பது போல வெளியே விடாமல் தினந்தோறும் பிரியாணி, பேட்டா என்று கொடுத்து கூட்டத்திற்கு கூப்பிடுவதுவாக விமர்சனம் செய்திருந்தார்.
குறிப்பாக நான் பிரச்சாரத்தில் ஈடுபடும் பொழுது ஆளும் கட்சியானது மக்களை திரட்டுவதில் தீவிரம் காட்டி வருவதாகவும் என்னால் மக்களுக்கு நன்மை நடந்தால் மகிழ்ச்சி தான் என்றும் எடப்பாடி அவர்கள் மேடையில் பேசும்பொழுது தெரிவித்திருந்தார்.மக்களின் பணம் மக்களிடையே செல்லட்டும், அவர்களிடம் பணத்தை வாங்கி விட்டு ஓட்டு மட்டும் இரட்டை இலைக்கு போட்டு விடுங்கள் என்று பழனிசாமி அவர்கள் கூறியிருந்த நிலையில் தற்போது வீடியோ ஆதாரத்துடன் பல தகவல்கள் வெளிவந்துள்ளது.
#திமுகவினர் ஓட்டுக்கு ரூ4000, வீட்டுக்கு வீடு கோழி கறி, மளிகை சாமான், இந்த வரிசையில் இன்று குக்கர்.
இடம் – #ஈரோடு_கிழக்கு வெட்டுக்காட்டு வலசு பகுதியில் வெளிப்படையாக குக்கர் வினியோகம் என இனையத்தில் வீடியோ பரவிவருகிறது@arivalayam @AIADMKOfficial @mkstalin @EPSTamilNadu pic.twitter.com/WZq62enH3h— Nowshath A (@Nousa_journo) February 20, 2023
முன்னதாகவே திமுக நிர்வாகிகள் பணம் பட்டுவாடா குறித்து பேசியது வைரலான நிலையில் அதனை தேர்தல் ஆணையம் சிறிதளவும் கூட கண்டு கொள்ளவில்லை. இதனையடுத்து ஈரோடு மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் நபர் ஒன்றுக்கு 4000 பணம் என்றும், கோழிக்கறி மற்றும் மளிகை சாமான் என கூறிவந்த நிலையில் இதனுடன் கூடுதலாக குக்கரும் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறதாம்.
இதனை வீடியோ ஆதாரத்துடன் எடுத்து ட்விட்டர் மற்றும் இதர இணையதளங்களில் வெளியிட்டு வரும் பட்சத்தில் இது செங்கோடம்பாளையம் சக்தி நகரில் உள்ள குமாரசாமி வீட்டில் இருந்து விநியோகம் செய்யப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.ஆனால் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு வேலை பார்க்கும் விதமாக இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அனைவர் மத்தியில் சந்தேகம் மற்றும் கேள்விகளை எழுப்புகிறது.