Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நான் ஓரினச்சேர்க்கையாளர்தான்… பிரபல டென்னிஸ் வீராங்கனை அறிவிப்பு

நான் ஓரினச்சேர்க்கையாளர்தான்… பிரபல டென்னிஸ் வீராங்கனை அறிவிப்பு

ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான டாரியா கசட்கினா தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என அறிவித்துள்ளார்.

ரஷ்யாவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான தடைச் சட்டம் ஒன்று விரைவில் இயற்றப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பலரும் அதற்கெதிராக தங்கள் குரல்களைக் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அந்நாட்டின் டென்னிஸ் வீராங்கனையான டாரியா கசட்கினா தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என அறிவித்துள்ளார்.

இதுபற்றி “செல்வாக்கு மிக்க விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றவர்களை வழி நடத்துவது முக்கியம்’ என்று உலகின் 12ம் நிலை வீராங்கனையான டாரியா கசட்கினா கூறினார். கடந்த மாதம், ரஷ்ய கால்பந்து வீராங்கனை நடேஷ்டா கர்போவாவும் லெஸ்பியனாக தன்னை அறிவித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்காணல் ஒன்றில் பேசிய டாரியா “அவர்கள் சொல்வது போல், அலமாரியில் வாழ்வது அர்த்தமற்றது. எந்தப் பிரயோஜனமும் இல்லை, நீங்கள் ஏதாவது சொல்லும் வரை அது எப்போதும் உங்கள் தலையில் சுற்றிக் கொண்டிருக்கும். வெளிப்படையாக, ஒவ்வொரு நபரும் எப்படி வெளிப்படையாக மற்றும் எவ்வளவு தூரம் என்பதை  தீர்மானிக்கிறார்கள்,” என்று கசட்கினா கூறினார்.

மேலும் இதுபற்றி “விளையாட்டு அல்லது வேறு எந்தத் துறையிலும் செல்வாக்கு மிக்கவர்கள் உண்மையில் அதைப் பற்றி பேசுவது முக்கியம். சமூகத்துடன் கடினமான நேரம் மற்றும் ஆதரவு தேவைப்படும் இளைஞர்களுக்கு இது முக்கியம்.” எனக் கூறியுள்ளார்

வீடியோ வெளியிடப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, கசட்கினா இன்ஸ்டாகிராமில் ஊதா இதய ஈமோஜியுடன் தனது காதலியோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இப்போது அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.

Exit mobile version