கோலி ஸ்மித் இல்லை:இவர்தான் என்னைப் போல விளையாடுகிறார்:சச்சினின் பாராட்டைப் பெற்ற வீரர்!
சச்சின் ஆஸ்திரேலிய வீர்ர மார்னஸ் லபுஷானின் கிரிக்கெட் விளையாடும் திறன் பற்றி சிலாகித்துப் பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள கட்டுக்கடங்காத காட்டுத்தி சேதங்களுக்கான நிவாரணத்துக்காக கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களைக் கொண்ட இரு அணிகளில் ஒன்றுக்குரிக்கி பாண்டிங்குக்கும் மற்றொரு அணிக்கு ஆடம் கில்கிறிஸ்ட்டும் தலைமையேற்றுள்ளனர். இதில் ரிக்கி பாண்டிங்கின் அணிக்கு இந்திய மாஸ்டர் பிளாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை நடக்க வுள்ள போட்டித் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது சச்சினிடம் இப்போது கிரிக்கெட் விளையாடுபவர்களில் உங்களைப் போலவே விளையாடுபவர் யார் என்ற கேள்வியை பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பினார். அதற்கு சச்சின் ‘ நான் கடந்த மாதம் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா லார்ட்ஸ் போட்டியை எனது மாமனாருடன் பார்த்தேன். ஸ்டீவ் ஸ்மித் வெளியேறிய பிறகு லபுஷானின் ஆட்டத்தை பார்த்தேன். அப்போது ஆர்ச்சர் பந்தில் தலையில் அடிவாங்கிய மார்னஸ் லபுஷான் அதன் பிறகு ஆடிய ஆட்டம் மிகச்சிறப்பானது. அப்போதே நான் நினைத்தேன் இவர் ஸ்பெஷல் வீரர் என்று. அவரது கால்நகர்வு துல்லியமாக உள்ளது, அதற்கு உடல்ரீதியாக மட்டுமல்லாது மனரீதியான உறுதி வேண்டும். தலையில் அடிவாங்கிய பிறகு மன உறுதி இல்லை எனில் உங்கள் கால் உங்கள் பேச்சைக் கேட்காது.’ எனக் கூறியுள்ளார்.
பலரும் சச்சின் கோலி அல்லது ஸ்மித்தைதான் சொல்வார் என எதிர்பார்த்திருந்த நிலையில் 14 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள லபுஷானை சச்சின் சொல்லி இருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. ஆனால் சச்சின் கணிப்பின் படி லபுஷான் சிறப்பாகவே விளையாடி வருகிறார். அவரது டெஸ்ட் ஆவரேஜ் 63 ஆகவும் ஒருநாள் ஆவரேஜ் 53 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.