அழுதுகொண்டே பெவிலியன் வரை வந்தேன்… சச்சின் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் பள்ளிக் கிரிக்கெட்டில் விளையாடிய போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ட்வீட்டில், அந்த மலரும் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் சச்சின், மைதானத்தில் விளையாடியபோது பெவிலியனாக இருந்த பழைய அமைப்பை பார்வையாளர்களுக்குக் காட்டுகிறார். மேலும் ‘எனது பேட்டிங்கின் போது நான் ஸ்ட்ரைக்கர் இல்லாத முனையில் இங்கே நின்று கொண்டிருந்தேன், எனது பள்ளி நண்பர் ராகுல் கன்புலே ஸ்ட்ரைக்கர்’ முனையில் இருந்தார். அவர் விக்கெட்டுகளுக்கு இடையே மிக வேகமாக ஓடுவார்.
அன்றைய போட்டியில், ராகுல் ஒரு ஆஃப் டிரைவ் அடித்து விக்கெட்டுகளுக்கு இடையே மூன்றாவது ரன் எடுக்க என்னை அழைத்தார். ஆனால் நான் அப்போது மிக வேகமாக ஓடவில்லை. நான் நான்கு ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனேன். அந்த ரன் அவுட் என் நினைவில் இன்னும் பசுமையாக உள்ளது, அவுட் ஆன பிறகு பெவிலியன் வரை அழுதுகொண்டே எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. அன்று நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இது எனது முதல் போட்டி, நான் பெரிய ரன்களை எடுக்க விரும்பினேன், ஆனால் அது நடக்கவில்லை.” என நடக்கவில்லை என்று 35 ஆண்டுகளுக்கு முந்தைய போட்டி குறித்து அந்த வீடியோவில் பேசியுள்ளார்.