Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சச்சின் டெண்டுல்கரின் ஆம்லெட் போடும் வீடியோ இணையத்தில் வைரல்

சச்சின் டெண்டுல்கரின் ஆம்லெட் போடும் வீடியோ இணையத்தில் வைரல்

சச்சின் டெண்டுல்கரின் ஆம்லெட் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட்டைப் போல வேறு என்ன பிடிக்கும் என்று கேட்டால், சந்தேகத்திற்கு இடமின்றி அது சுவையான உணவு. சச்சின் சாலையோர உணவுகள் அவருக்கு மிகவும் பிடித்தமானது.

வடபாவ் மீதான தனது அன்பையும் பகிர்ந்துள்ளார். மகள் சாரா பரிந்துரைத்த லண்டனில் உள்ள ஒரு உணவகத்தில் பாஸ்தா சாப்பிடும் வீடியோவையும் சச்சின் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது டெண்டுல்கர் ஒரு உணவகத்தில் ஆம்லெட் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சச்சினே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வீடியோவில், ஆம்லெட் போடுவதை சச்சின் அதை கிரிக்கெட்டில் ஃபிளிக் ஷாட்டுடன் ஒப்பிட்டுள்ளார். இதுவரை இந்த வீடியோவை கிட்டத்தட்ட 25 லட்சம் பேர் பார்த்துள்ளனர். சச்சின் பதிவை 3.9 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

Exit mobile version