நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்திய அணி இதுவரையில் இல்லாத வகையில் 0-3 என்ற கணக்கில் இந்த தொடரை இழந்துள்ளது. சொந்த மண்ணில் இதுபோன்ற தோல்வி இதுவே முதல் முறை இதை முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அணி தந்து சொந்த மண்ணில் 12 வருடங்களுக்கு முன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 0-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதன் பின் இந்திய அணியின் சொந்த மண்ணில் தோல்வி அடையாத 12 வருட சாதனையை முறியடித்துள்ளது. இதுகுறித்து சச்சின் கேள்விகளை பட்டியலிட்டுள்ளார்.
இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது ஜீரணிக்க முடியாத ஒன்று. இந்த தோல்வி குறித்து பரிசோதனை செய்ய வேண்டிய நேரம். இந்த தொடருக்கு இந்திய அணி தயாராக இல்லையா? பேட்ஸ்மேன்கள் சரியாக ஆடவில்லையா? சரியான போட்டி பயிற்சி இல்லையா? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மேலும் மூன்றாவது போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட் மற்றும் 90 ரன் அடித்த சுப்மன் கில் ஆகிய இருவரையும் பாராட்டியுள்ளார். ரிஷப் பண்ட் ஒவ்வொரு களத்திற்கும் ஏற்றவாறு தனது ஃபுட் ஒர்க்கை மாற்றி சிறப்பாக செயல்படுகிறார் என பாராட்டியுள்ளார். மற்ற வீரர்களின் சொதப்பலான ஆட்டம் தான் தோல்விக்கு காரணம் என்று மறைமுகமாக சுட்டி காட்டியுள்ளார்.