ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சிஎஸ்கே அணியன் முக்கிய வீரர்.!!

0
176

காயம் காரணமாக சிஎஸ்கே அணி வீரர் சாம் கரண் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியதால், பலரும் விமர்சனம் செய்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிஎஸ்கே அணி முதல் அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

மேலும், இந்தத் தொடரில் சிஎஸ்கே அணிதான் ஐபிஎல் கோப்பையை வெல்லும் என பலரும் கணித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சாம் கரன் காயம் காரணமாக, இந்த ஐபிஎல் தொடர் மற்றும் வருகின்ற டி20 உலக கோப்பை தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.

சென்னை அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டிக்குப் பிறகு சாம் கரனுக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் மருத்துவ பரிசோதனையில் அவரது முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து சாம் கரன் இன்னும் ஓரிரு நாட்களில் துபாயிலிருந்து நாடு திரும்புவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், சாம் கரன் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளதால் , அவருக்கு பதிலாக அவரது சகோதரரான டாம் கரண் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.