IPL: சாம் கரன், வெங்கடேஷ் ஐயர், டேவிட் மில்லர், ராகுல் திரிப்பாதி ஆகிய வீரர்களில் ஒருவரை வாங்க திட்டமிட்டுள்ளது.
ஐ பி எல் 2025 ஆண்டு தொடருக்கான போட்டி மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் நடைபெறும். இந்த ஐ பி எல் தொடருக்கான மெகா ஏலம் இந்த மாதம் கடைசியில் 24, 25 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தங்கள் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அனைத்து அணிகளும் சேர்த்து மொத்தம் 46 வீரர்களை தக்கவைத்தது. அதில் CSK அணி 5 வீரர்களை தக்கவைத்தது அதில் ருதுராஜ் கெய்க்வாட் ரூ.18 கோடி, ரவீந்திர ஜடேஜா ரூ.18 கோடி, மதிஷா பத்திரானா ரூ.13 கோடி, சிவம் துபே ரூ.12 கோடி, எம் எஸ் தோனி ரூ. 4 கோடி என 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. CSK அணி ரூ.55 கோடி தொகையுடன் ஏலத்தில் பங்கேற்க உள்ளது.
CSK அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவை என்பதால் வெங்கடேஷ் ஐயர், டேவிட் மில்லர், சாம் கரன், ராகுல் திரிபாத்தி ஆகிய நான்கு வீரர்களில் ஒருவரை வாங்க திட்டமிட்டுள்ளது. சென்னை அணியின் அனலிஸ்ட்டாக KKR அணியின் அனலிஸ்ட்டாக செயல்பட்ட ஏ ஆர் ஸ்ரீகாந்த் இணைக்கப்பட்டுள்ளார். அவர் வெங்கடேஷ் ஐயர் மீது ஒரு கண் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே CSK அணியில் விளையாடிய வீரர் இங்கிலாந்து நாட்டின் ஆல் ரவுண்டர் சாம் கரன் அவர் ஏற்கனவே CSK
அணியில் விளையாடி அனைவர் மனதிலும் சுட்டி குழந்தை என்று அழைக்கப்பட்டார். அவர் மீண்டும் அணியில் எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியகியுள்ள்ளது.மேலும் டேவிட் மில்லர் மீது ஏற்கனவே ட்ரேடிங் முறையில் வாங்க முடியாமல் போனது இந்த முறை முயற்சி செய்யும். ராகுல் த்ரிப்பாதி வாங்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.