இந்திய அணி தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சஞ்சு சாம்சன் சதம் விளாசி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியில் அதிக திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத வீரர்களில் ஒருவர் தான் சஞ்சு சாம்சன். இவர் தற்போது தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறார். வங்கதேசத்துக்கு எதிரான கடைசி போட்டியில் சதம் அடித்தார். அதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா முதல் போட்டியில் சதமடித்தார். இதன் மூலம் அடுத்ததடுத்து டி 20 போட்டிகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.
அவரது தந்தை விஸ்வநாத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தோனி கோலி மற்றும் ரோஹித் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அனைவரும் என் மகனின் 10 ஆண்டு கால வாழ்க்கையை அழித்து விட்டார்கள். ஆனால் எவ்வளவு காயப்படுத்தினாலும் என் மகன் சாதனை படைத்தது வருகிறான். முன்னாள் வீரர் ஸ்ரீஷாந்த் வார்த்தை என்னை காய படுத்தியது.
வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்த போது பாராட்டவில்லை ஆனால் அவர் இது போன்ற அணிகளிடம் மட்டும் சதம் அடிப்பார் என்று கிண்டல் செய்தார் எந்த அணியுடன் அடித்தாலும் அது சதம் தான் என்றும் கூறினார். 2015 அணியில் இடம்பிடித்த இவர் அதன்பின் எந்த போட்டியிலும் விளையாடாமல் தற்போது தான் இடம் பெற்று வருகிறார்.