இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி மற்றும் ரிஷப் பண்ட் கூட செய்ய முடியாத சாதனையை செய்துள்ளார் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக உள்ள சஞ்சு சாம்சன்.
இந்திய அணி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி20 போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் தென்னாபிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்கி 47 பந்துகளில் சதமடித்தார். இதற்கு முன் இந்திய அணியில் உள்ள விக்கெட் கீப்பரான தோனி மற்றும் ரிஷப் பண்ட் இதுவரை சர்வதேச போட்டிகளில் சதமடித்ததில்லை. ஆனால் சஞ்சு சாம்சன் அந்த சாதனையை முறியடித்தார்.
வங்கதேச அணிக்கு எதிரான டி 20 தொடரின் கடைசி போட்டியில் 111 ரன்கள் அடித்திருந்தார். தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே சதம் விளாசி தொடர்ந்து சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் அதிக ரன் எடுத்த சாதனையும் படைத்துள்ளார். ஒரு சதத்தின் மூலம் பல சாதனைகளை செய்துள்ளார்.