இந்தியா-நியூசிலாந்து போட்டிக்கு பின் இருந்து கே எல் ராகுல் மற்றும் துருவ் ஜூரல் இருவரும் ஆஸ்திரேலியா அனுப்பப்பட்டனர். அங்கு இந்திய ஏ அணியில் இணைந்து ஆஸ்திரேலியா ஏ அணியுடன் விளையாட அறிவுறுத்தப்பட்டது.
இதற்கு காரணம் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டியின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது சொந்த காரனங்களால் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து தொடக்க வீரராக கே எல் ராகுலை களமிறக்கவும், மிடில் ஆர்டரில் களமிறக்கப்பட்ட சர்ப்ராஸ் கான் முதல் ஆட்டத்தில் மட்டுமே சதம் அடித்தார் அதன்பின் ரன்கள் அடிக்காமல் ஆட்டமிழந்தது பிசிசிஐ க்கு ஏமாற்றத்தை அளித்தது. இதனால் இந்திய அணி அவருக்கு பதிலாக துருவ் ஜூரலை விளையாட வைக்க திட்டமிட்டு கே எல் ராகுல் மற்றும் துருவ் ஜூரல் இருவரையும் ஆஸ்திரேலியா அனுப்பியுள்ளது.
அங்கு இந்திய ஏ அணியில் இணைந்த அவர் தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் அவர் இந்திய ஏ அணியில் களமிறங்கியும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். துருவ் ஜூரல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சர்ப்ராஸ் கானுக்கு பதில் துருவ் ஜூரல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.