‘ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஆபத்தா?… பென் ஸ்டோக்ஸ் ஓய்வு எச்சரிக்கை மணியா?’-முன்னாள் வீரர் கருத்து

0
125

‘ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஆபத்தா?… பென் ஸ்டோக்ஸ் ஓய்வு எச்சரிக்கை மணியா?’-முன்னாள் வீரர் கருத்து

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் ஆல்ரவுண்டர்களில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என, அனைத்திலும் அசத்தி வருபவர் பென் ஸ்டோக்ஸ். இவரின் பங்களிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மிகப்பெரிய ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணியின் கனவான உலகக்கோப்பை கிரிக்கெட்டை வென்று கொடுத்ததில் பென் ஸ்டோக்ஸ் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

இந்நிலையில் அவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியோடு ஓய்வு பெற்றுள்ளார். திடீரென ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் ஓய்வு குறித்து பேசுகையில் ‘அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட முடியவில்லை’ என்பது போல பேசியுள்ளார். ஐசிசி அடுத்த 5 ஆண்டுகளுக்கான அட்டவணையை அறிவித்துள்ளது. இதில் ஐபிஎல் போன்ற தொடர்களும் இடம்பெற்றுள்ளன.

இதனால் வரிசையாக கிரிக்கெட் வாரியங்கள் லீக் போட்டிகள் மற்றும் இருநாட்டு தொடர்களை நடத்துகின்றன. இதுபோன்ற நெருக்கடியே வீரர்களின் திடீர் ஓய்வுக்குக் காரணம் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மற்றொரு முன்னாள் நியுசிலாந்து வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ் ‘பென் ஸ்டோக்ஸ் ஒய்வு ஒரு நாள் போட்டிகளுக்கான அச்சுறுத்தலா எனக் கேட்கிறார்கள். அப்படி இல்லை. இன்னும் ஒரு ஆண்டில் 50 ஓவர் உலக்கோப்பை வர உள்ளது.

2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை எப்படி இருந்தது என நமக்கே தெரியும். பென் ஸ்டோக்ஸ் ஓய்வு ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளுக்கே ஆதாயம். அவர் இனிமேல் சுதந்திரமாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடலாம்’ எனக் கூறியுள்ளார்.