பெண்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசிய ஆன்மீக தகவல்கள்..!! பயன்படுத்தி பலன் பெறுங்கள்..!!

Photo of author

By Janani

பெண்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசிய ஆன்மீக தகவல்கள்..!! பயன்படுத்தி பலன் பெறுங்கள்..!!

Janani

1. உப்பு பரிகாரம்:

*சாப்பிடும் இடத்தில் உப்பை வைப்பது செல்வ செழிப்பை அதிகரிக்கச் செய்யும். வீட்டில் செல்வம் நிறைந்து இருக்க உதவும்.

*குளிக்கும் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை சேர்த்து 20 நிமிடங்கள் கழித்து குளித்தால் உடலில் உள்ள கெட்ட சக்திகள் நீங்கும்.

*செல்வ வளமும், லட்சுமி கடாட்சமும் பெருகும். கஷ்டங்கள், கடன், வருமை, தரித்திரம், கண் திருஷ்டி ஆகிய அனைத்தும் நீங்கும்.

2. நீங்கள் அடுத்தவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் என்றால் செய்ய வேண்டிய பரிகாரம்:

*வீட்டிலேயே கருப்பசாமியை மனதார நினைத்து ஒரு விளக்கு ஏற்றி வைத்து, முந்திரிப் பருப்பு, மா, பலா, வாழை, முக்கனிகள் இவற்றை நெய்வேத்தியமாக வைக்கவும்.

*உங்களுக்கு இருக்கும் கஷ்டத்தை கருப்புசாமி இடம் முறையிட்டு, அந்தப் பிரச்சனை முடிய வேண்டும், உங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

* பிறகு “ஓம் கருப்பசாமியை நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும் பின்பு கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்யவும். இந்த பூஜையை காலை 6:00 மணிக்கு முன்பாக அல்லது மாலை 6:00 மணிக்கு பின்பாக செய்ய வேண்டும்.

3. சொத்து பிரச்சனை தீர என்ன செய்ய வேண்டும்?:

*சொத்துக்களை இழந்தோரும், ஏமாற்றி பிடுங்கப்பெற்றோரும், வரவேண்டிய நியாயமான பூர்வீக சொத்துக்கள் வராமல் இருப்போரும், இழந்த செல்வம், புகழ், கௌரவம் ஆகிய அனைத்தையும் திரும்ப பெற வராகி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 முதல் 7 மணி அல்லது இரவு 8 முதல் 9 மணி அளவில் ஒரு மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண்கடுகை முடிந்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் இழந்த அனைத்தையும் திரும்பப் பெறலாம்.

4. சாஸ்திரங்கள் கூறும் துளசியின் மகிமைகள்:

*துளசியை பார்த்தால் செய்த பாவங்கள் அழியும், துளசியை தொட்டால் உடல் தூய்மை அடையும், துளசியை பணிந்தால் உடல் நோய்கள் தீரும், துளசிக்கு நீர் வார்த்தால் எமனுக்கு பயம் உண்டாகும்.

*துளசியை நட்டால் பகவான் கிருஷ்ணரை நெருங்கலாம்.

*கிருஷ்ணரின் பாதத்தில் துளசியை அர்ப்பணித்தால் நன்மை கிடைக்கும். அத்தகைய துளசியை தினமும் வணங்க வேண்டும்.

5. தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?:

வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியை காட்டுகிறது. “எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையை கொடு” என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.

6. வெள்ளிக்கிழமை பெண்கள் செய்யக் கூடாதவை:

*வெள்ளிக்கிழமை தலையில் பேன் பார்க்க கூடாது. அழகில் கவனம் செலுத்தாமல் மஞ்சளை முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும்.

*கருப்பு நிற ஆடைகள் அணியக்கூடாது.

*வெள்ளிக்கிழமை இறைச்சி சாப்பிடக்கூடாது. பால், தயிர், உப்பு, மிளகாய் இவற்றை இடது கையால் யாருக்கும் கொடுக்கக் கூடாது.

*வெள்ளிக்கிழமை பூக்கள், கண்ணாடி யாருக்கும் கொடுக்கக் கூடாது. பெண்கள் வெள்ளிக்கிழமை பொய் சொல்லக் கூடாது. கழுத்து வெறுமையாக இருக்கக் கூடாது.