செந்தில் பாலாஜி பதவிக்கு புதிய அமைச்சர்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

0
125
Senthil Balaji is the new minister!! Tamil Nadu Government Ordinance Issue!!

செந்தில் பாலாஜி பதவிக்கு புதிய அமைச்சர்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சட்ட விரோத வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சென்ற ஜூன் 13 ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டார்.

கைது செய்யும் போது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இவரை சோதித்த மருத்துவர்கள் உடனடியாக இவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தனர்.

இதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதன் கீழ், சென்னை காவேரி தனியார் மருத்துவமனையில் இவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

எனவே இவர் மருத்துவமனையில் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆனாலும் அவர் இன்னும் பூரண குணமடையவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இவரின் நீதிமன்றக் காவல் மருத்துவமனையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி மீதான இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் தினமும் நிலுவையில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இவரிடம் இருந்த துறைகள் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

எனவே தற்போது செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகவே இருந்து வருகிறார். கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி பணியாற்றி வந்தார்.

ஆனால் தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கும் சூழலில் அமைச்சர் முத்துசாமியை கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளனர். இது தொடர்பான ஆணையை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.