செந்தில் பாலாஜி ராஜினாமா.. அமைச்சரவையில் புதிய மாற்றம்!! முதல்வரின் அடுத்த கட்ட நடவடிக்கை!!

0
264
#image_title

செந்தில் பாலாஜி ராஜினாமா.. அமைச்சரவையில் புதிய மாற்றம்!! முதல்வரின் அடுத்த கட்ட நடவடிக்கை!!

ஓரிரு வாரங்களுக்கு முன்பு வருமானவரித்துறையினர் கரூர் மாவட்டம் என தொடங்கி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். இந்த வருமானவரித்துறை ரெய்டானது தமிழகத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக நிர்வாகிகள் மற்றும் வருமானவரித்துறையினர் கைகழுப்பு என தொடங்கி பல திருப்பங்கள் இந்த ஆய்வில் ஏற்பட்டது. இவ்வாறு ஆய்வு மேற்கொண்டதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் அமலாக்க துறையினர் நேற்று முன் தினம் முதல் சோதனை செய்ய ஆரம்பித்தனர்.

தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையை கூட விட்டு வைக்கவில்லை. அனைத்து இடங்களிலும் உள்ளே நுழைந்து அலசி ஆராய்ந்து இறுதியில் அவரை விசாரிக்க கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அச்சமயத்தில் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் அடைப்பு உள்ளதாகவும் அதற்குரியதான சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் அவ்வபோது வெளிவந்த வண்ணமாக தான் உள்ளது.

மேற்கொண்டு செந்தில் பாலாஜியை வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி இன்று நீதிமன்றத்தில் இது குறித்து விசாரணை முடிவுகள் வெளிவரும் நிலையில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜி தானாக ராஜினாமா செய்ய வேண்டும் என்பதையும் பலர் எதிர்பார்த்து வருகின்றனர். இதனை அடுத்து இவரது இலக்காக்கல் யாருக்கு வழங்கப்படும் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

அந்த வகையில் மின்சாரத் துறையை தங்கம் தென்னரசிடமும் மற்றும் மதுவிலக்கு துறையை பெரியசாமியிடமும் கொடுப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அடுத்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.