Netflix  கொடுத்த அதிர்ச்சி தகவல்!! இனி பயனாளர்களின் கதி என்ன?

0
172
Shocking information given by Netflix!! What is the fate of users?

Netflix  கொடுத்த அதிர்ச்சி தகவல்!! இனி பயனாளர்களின் கதி என்ன?

இந்த காலத்தில் மக்கள் அனைவரும் புதிய படங்களை பார்ப்பதற்கு தியேட்டருக்கு செல்வது குறைந்து காணப்படுகிறது. இப்போது இருக்கக்கூடிய அனைத்து ஆண்டிராய்டு மொபைல்களிலும் குறிப்பிட்ட செயலிகளின் மூலமாக நம் வீட்டில் இருந்த படியே அனைத்து திரைப்படங்களையும் கண்டு கழிக்கலாம்.

அதில் முன்னணி நிறுவனமாக இருக்கின்ற ஒரு செயலி தான் நெட்பிளிக்ஸ் ஆகும். இதில் பார்வையாளர்களுக்கு ஏத்த பொழுபோக்கு நிகழச்சிகளுக்கு பஞ்சமே இல்லை.

இதில் அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் மொபைலிலேயே பார்த்துக் கொள்ளலாம். மேலும், இதில் விருது பெற்ற தொடர்கள், ஆவணப்படங்கள், வெப் சீரீஸ், ஸ்டாண்ட் அப் சிறப்பு தொடர்கள் போன்ற பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை எப்பொழுதுமே பார்த்து ரசிக்கலாம்.

இந்த நெட்பிளிக்ஸ்-ல் பார்வையாளர்கள் மாத சந்தா அல்லது வருட சந்தா கட்டி நிகழ்ச்சிகளை பார்த்து வருவார்கள். இதற்கென்று ஒரு பாஸ்வார்டு இருக்கும்.

இந்த பாஸ்வார்டை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் இந்த நெட்பிளிக்ஸ்-ல் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். இதனால் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது.

இதனை தடுக்கும் விதமாக தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒரு முடிவை எடுத்துள்ளது. அதாவது, இனிமேல் இந்த பாஸ்வார்டை யாருடனும் பகிர்ந்துக் கொள்ள முடியாது என்று கூறி உள்ளது.

மேலும், குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே பாஸ்வார்டை பகிர்ந்துக் கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது. அதேப்போல் சுயவிவர பரிமாற்றம், பயன்பாடு, சாதனங்களை நிர்வகித்தல் போன்ற சிறப்பம்சங்களுடன் ஓடிடி நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

இந்த புதிய மாற்றமானது பயனாளர்களின் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாகவும், வருவாய் படிப்படியாக குறைந்து வருவதன் காரணமாகவும் எடுக்கப்பட்டுள்ளது என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் கூறி உள்ளது.