Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாராலிம்பிக்: தங்க வேட்டையை தொடங்கிய இந்தியா.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 19 வயதான அவனி லெகாரா தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் இறுதிப்போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று முந்தைய உலக சாதனையை சமன் செய்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம் 4 வெள்ளி 2 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்று
34 ஆவது இடத்தில் உள்ளது.

Exit mobile version