Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெள்ளை முடி அனைத்தும் கருமையாக மாற வேண்டுமா?? இதனை பயன்படுத்தி பாருங்கள்!!

வெள்ளை முடி அனைத்தும் கருமையாக மாற வேண்டுமா?? இதனை பயன்படுத்தி பாருங்கள்!!

எவ்வளவு வெள்ளை முடி இருந்தாலும் கருமையாக மாறும் அதற்கு இதனை பயன்படுத்தினால் போதும்.வயதான காலத்தில் வெள்ளை முடி உண்டாவது இயற்கையானது.

ஆனால் 30 வயதிலும் சிலநேரங்களில் 20 வயதிலும் வெள்ளை முடி இருந்தால் அது மோசமான மன உளைச்சலை உண்டாக்கிவிடும்.

நரை மற்றும் வெள்ளை முடி இரண்டும் உங்கள் முடி நிறமியை இழப்பதால் உண்டாகும் பிரச்சனை நிறமியில் குறைப்பு இருக்கும் போது முடி சாம்பல் நிறமாக மாறும். முற்றிலும் நிறமி இல்லாத போது அது வெண்மையாக மாறும்.

வயதாகும் போது முடியின் ஒவ்வொரு இழையிலும் செலுத்தப்படும் நிறமியின் அளவு குறைகிறது அதனால் தான் அது சாம்பல் நிறமாகவும் இறுதியில் வெள்ளை நிறமாகவும் மாறுகிறது.எனவே வெள்ளை முடியை கருமையாக மாற்றுவதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்..

தேவையான பொருட்கள்:

கடுகு எண்ணெய்

எலும்பிச்சை பழம்

விளக்கெண்ணெய்

செய்முறை:

முதலில் ஒரு கப்பில் 5 டேபிள்ஸ்பூன் கடுகு எண்ணெய், 4 சொட்டு எலுமிச்சை பழம் சாறு மற்றும் 5 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளவும்.

பின்பு இரவு தூங்கும் முன்பு முடியை சிக்கெடுத்த பின்பு ஒரு காட்டன் வைத்து வெள்ளை முடி இருக்கும் இடத்தில் தேய்த்து ஒரு ஐந்து நிமிடம் நம் விரல்களால் மசாஜ் செய்யவும்.

எலுமிச்சை பழம் சாறு பயன்படுத்துவதனால் முடி உதிர்தல் நரைமுடி இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என்று சந்தேகம் வரலாம் ஆனால் நாம் நேரடியாக இதனை பயன்படுத்தவில்லை இதனுடன் இரண்டு பொருள்கள் சேர்த்து தான் பயன்படுத்துகிறோம் அதனால் இதனை ஸ்கேல்பில் தேய்த்தால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

நிறைய வளமுடன் இருப்பவர்கள் இதனை தொடர்ந்து ஒரு வாரம் பயன்படுத்தலாம் அல்லது அங்கங்கே இருக்கும் வெள்ளை முடிக்கு 3 -4 நாட்கள் இதனை பயன்படுத்தினால் நல்ல ஒரு பல நிச்சயமாக கிடைக்கும்.

Exit mobile version