சுப்மன் கில் அதிரடி சதம்… மற்ற வீரர்கள் ஏமாற்றம்… ஜிம்பாப்வேக்கு இந்திய அணி நிர்ணயித்த இலக்கு
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்திய அணி ஜிம்பாப்வே கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டையும் வென்றுள்ள இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை வென்றுள்ளது.
அதையடுத்து இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இந்திய அணியில் பெரிதாக மாற்றம் எதுவுமில்லாமல் களமிறங்கியது. பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ருத்துராஜ் மற்றும் ராகுல் திரிபாட்டி ஆகியோருக்கு கடைசி போட்டியிலும் இடம் கிடைக்கவில்லை.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கே எல் ராகுலும் ஷிகார் தவானும் நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ராகுல் 30 ரன்களில் ஆட்டமிழக்க, அதன் பின்னர் வந்த சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தனர். இஷான் கிஷான் மற்றும் நிலைத்து நின்று 50 ரன்கள் சேர்த்தார். சுப்மன் கில் 130 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 289 ரன்களை சேர்த்துள்ளது. ஜிம்பாப்வே அணியின் பிராட் ஈவன்ஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்களை வீழ்த்தினார்.