cricket: இந்திய அணி என்றால் மட்டும் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் சொல்லி விக்கெட் எடுத்த சிராஜ்.
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நடந்து முடிந்த நிலையில் இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் அதிரடியாக சதம் விளாசினார்.
இந்திய அணி என்றால் மட்டும் மட்டும் டிராவிஸ் ஹெட் வெறித்தனமாக விளையாடுவது வழக்கமாக வைத்துள்ளார். அது போலவே இந்த இரண்டாவது போட்டியில் அபார சதத்தை 111 பந்துகளில் பதிவு செய்தார். மொத்தமாக 141 பந்துகளுக்கு 140 ரன்கள் எடுத்து விக்கெட் இழந்தார்.
இவர் இதற்கு முன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 ல் இறுதி போட்டியில் 163 ரன்களும்,ஐசிசி ஓடிஐ உலக கோப்பை போட்டியில் இறுதி போட்டியில் 137 ரன்கள் அடித்தார். மேலும் ஐசிசி டி 20 உலக கோப்பை 2024 போட்டியில் 76 ரன்களும் தற்போது பார்டர் கவாஸ்கர் 2024 தொடரில் 140 ரன்களை பதிவு செய்து இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக உள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 140 ரன்களுடன் விளையாடி கொண்டிருந்த டிராவிஸ் ஹெட் எதிராக பந்து வீச சிராஜ் களமிறங்கினார். அஸ்வின் வீசிய பந்தை அடித்த டிராவிஸ் ஹெட் ஆனால் அதை சிராஜ் மிஸ் செய்தார். அதற்கு பதிலடியாக இந்த முறை அவரின் பந்து ஸ்டம்பை குறிவைத்தது அதனால் டிராவிஸ் ஹெட் விக்கெட் இழந்தார். இதனால் தலைவலிக்கு மருந்தாக அமைந்தார் சிராஜ்