Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக்கில் நடிக்கப்போவது இவர்தான்… வெளியான தகவல்!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனின் பயோபிக்கில் நடிக்கப்போவது இவர்தான்… வெளியான தகவல்!

தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இந்திய அணிக்காக சில போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் மற்றும் ஐபிஎல் போட்டிகள் மூலமாக கவனம் ஈர்த்தவர் நடராஜன். இறுதி ஓவர்களில் யார்க்கர் வீசி பேட்ஸ்மேன்களை திணறவைக்கும் திறன்படைத்த இவர் இந்திய அணிக்காக வெகுசில போட்டிகளிலேயே விளையாடியுள்ளார்.

ஆஸ்திரேலியா சென்ற சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகள்,ஒருநாள் போட்டிகள்,டி20 போட்டிகள் என அனைத்து பார்மேட்களிலும் ஒரே சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற வீரர் நடராஜன் ஆவார்.2017ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார் இவர்.அதற்கு அடுத்த ஆண்டு நடராஜன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார்.

ஆனால் காயம் காரணமாக இவர் தொடர்ந்து இந்திய அணியில் விளையாடவில்லை. இந்நிலையில் இவரின் பயோபிக் இப்போது சினிமாவாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக சமீபத்தில் அளித்த் நேர்காணலில் இதை நடராஜன் உறுதி செய்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் ஆனந்தவிகடனுக்கு அளித்த நேர்காணலில் “முதலில் என் பயோபிக்கை எடுக்க பலர் கேட்டார்கள். ஆனால் நான் சம்மதிக்கவில்லை. ஆனால் இப்போது என் பயோபிக் எடுக்கப்பட உள்ளது. அதில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்” எனக் கூறியுள்ளார்.

இது தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version