இந்தியா தென்னாப்பிரிக்க முதல் டி20 போட்டியில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசி விக்கெட் எடுத்த தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் பேட்ரிக் க்ரூகர்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்கத்தில் அபிஷேக் ஷர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்த படியாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் கூட்டணி அதிரடியாக அணிக்கு ரன்கள் சேர்த்தனர். 9 வது ஓவரை பேட்ரிக் க்ரூகர் வீசினார் இந்த ஓவரில் மொத்தம் 11 பந்துகள் வீசினார். இரண்டாவது பந்தில் சஞ்சு சாம்சன் பவுண்டரி அடித்தார். அதன் பின் 3 ஒய்டு பந்துகளும் 2 நோ பாலும் வீசினர்.
இந்த ஓவரின் இறுதிப் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்ற சூர்யகுமார் யாதவ் கேட்ச் அவுட் ஆனார். இதனால் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் இந்த போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.