பள்ளி பேருந்தில் திடீரென்று வெளிவந்த புகை!! பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!!
பொதுவாக தொலைதுர பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வருவதற்காக பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். இதிலும் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு என்று பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிய ஒன்று இயங்கி வருகின்றது. இதில் தொலைதுர பள்ளி மாணவர்களுக்கு என்று பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
மேலும் அந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாணவர்களையும் அதில் பயணித்து வருகின்றனர். தற்பொழுது நேற்று காலை வழக்கம் போல் பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு ஓட்டுனர் அந்த பேருந்தை கன்யாகுமரி ரயில் நிலைய சந்திப்பில் சென்று கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் பேருந்தில் இருந்து திடீரென்று புகை வர ஆரபித்தது. இதனை பார்த்த ஓட்டுனர் பேருந்தில் உள்ள பள்ளி மாணவர்களை உடனடியாக கீழே இறங்கும் படி எச்சரித்தார்.
பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்களும் அலறி அடித்து கொண்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். பின்னர் அருகில் இருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
பிறகு அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் . மேலும் பேருந்தில் உள்ள உதுரி பாகங்கள் சேதமடைந்து புகை வந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகின்றது.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்பாக இருந்தது.