Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனுஷின் 50 வது படத்தில் இத்தனை கதாநாயகிகளா?? வெளிவந்த ரகசிய தகவல்!!

So many heroines in Dhanush's 50th film?? Secret information revealed!!

So many heroines in Dhanush's 50th film?? Secret information revealed!!

தனுஷின் 50 வது படத்தில் இத்தனை கதாநாயகிகளா?? வெளிவந்த ரகசிய தகவல்!!

நடிகர் தனுஷ்  திரைத்துறையின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் ஆரம்ப காலக்கட்டத்தில்  எதார்த்தமான முகம், மெல்லிய உடல் தோற்றத்துடன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிபடுத்தினார்.

யாரும் எதிர்பாராத வேடங்களில் எல்லாம் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தி பல கோடிக்கணக்கான ரசிகர்களை தனது வசம் வைத்துள்ளார்.இப்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தனுஷ் அவர்கள் தற்பொழுது கேப்டன் மில்லர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து உள்ளார்.இந்த படம் முடிவடைந்த பிறகு தனுஷ் தனது 50 வது படத்தை தானே இயக்கி தானே நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் படத்திற்கான பூஜை எந்த வித சத்தமும் இல்லாமல் சென்னையில் உள்ள ஈசிஆரில் நடந்தது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் செட்டு போட்டு பிரமாண்டமாக எடுக்கப்பட உள்ளது.

இந்த படத்தில் தனுஷ் அவர்களுடன் எஸ்ஜே சூர்யா, சந்திப் கிஷான் ,காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

தற்பொழுது தனுஷின் 50 வது படத்தில் விஸ்ணு விசால் ,ஜெயராம் காளிதாஸ் உள்ளிட்ட பிரபலங்களும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Exit mobile version