இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் டிசம்பர் மாதம் 26ம் தேதி ஆரம்பம் ஆனது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், கேஎல் ராகுல், உள்ளிட்டோர் களமிறங்கினர் மயங்க் அகர்வால் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான லோகேஷ் ராகுல் சதம் அடித்து அசத்தினார் இரண்டாவது நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய தினம் மூன்றாவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 4 ரன்கள், தாக்கூர் 4 ரன்கள், என எடுத்து ஆட்டமிழந்தார்கள்.
தென்ஆப்பிரிக்க அணியின் தரப்பில் மிக சிறப்பாக பந்து வீசிய நிகிடி 6 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் ஒரு விக்கெட்டையும், கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆரம்பித்த தென்ஆப்பிரிக்கா அணி இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து துல்லியமாக பந்துவீசி கடுமையான நெருக்கடி கொடுத்ததன் காரணமாக, தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 62.3 அவர்கள் தாக்குப் பிடித்த அந்த அணி 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணியின் சார்பாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார், 130 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஒருவரான மயங்க் அகர்வால் 4 ரன்கள் எடுத்த நிலையில், வெளியேறினார் அதேபோல கே எல் ராகுல் 5 ரன்களுடனும், ஷர்துல் தாகூர் 4 ரன்களுடனும், ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர இறுதியில் 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் சேர்த்து இருக்கிறது, 146 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில், இந்திய அணி இருக்கிறது.