ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
இன்று ஆடி 1 தொடங்குவதால் பொதுமக்கள் அனைவரும் கோவிலுக்கு செல்ல இருப்பார்கள் அதனால் கோவில்களில் அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
தமிழக மக்கள் அனைவரும் அதிக அளவில் அரசு பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் இன்று ஆடி மாதம் என்பதால் ஏராளமான பகதர்கள் கோவிலுக்கு செல்ல பேருந்துகளை தேடி வருவார்கள்.
இன்று கூட்ட நெரிசல் அதிமாக இருக்கும் என்பதால் தமிழகத்தில் வழக்கம் போல் இயங்கும் பேருந்துகளை வைத்து இந்த கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாது என்பதால் பொதுமக்கள் தரப்பில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டது.
ஏற்கனவே தமிழக அரசு வார இறுதி நாட்களிலும் மற்றும் பண்டிகை நாட்களிலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறித்துள்ளது.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அழகர் கோவில் ,அணைப்பட்டி போன்ற கோவில்களுக்கு அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் செல்வதால் போக்குவரத்து துறை கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகளை இயக்க அந்த மாவட்ட அரசு முடிவு செய்துள்ளது.
இந்த ஆடி அம்மாவசையை முன்னிட்டு ஆத்தூர் சடையாண்டி கோவில் ,தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோவில் ,தேனி உப்புத்துறை மாளிகைப் பாறை கருப்பசாமி கோவில் ,ராஜபாளையம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் ,குச்சனூர் கோவில் போன்ற கோவில்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிவதால் அந்த பகுதிகளிலும் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.