மகளிர் உரிமைத் தொகைக்கான சிறப்பு முகாம்கள்!! மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தகவல்!!
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் அறிமுகப்படுத்தி, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
இந்த உரிமை தொகை வருகின்ற செப்டம்பர் மாதம் பதினைந்தாம் தேதி முதல் வழங்க இருக்கிறது. இந்த உரிமை தொகைக்கான டோக்கன்கள் நேற்று கொடுக்க ஆரம்பித்த நிலையில், தற்போது பதினைந்து சதவிகித பணிகள் முடிவடைந்து இருக்கிறது.
அந்த வகையில், இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருக்ப்பதாக மாநகாரட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். இந்த முகாம்கள் 503 பகுதிகளில் உள்ள 703 கடைகளில் நடைபெற இருக்கிறது. இந்த முகாமானது ஐநூறு கார்டுகளுக்கு ஒன்று என்கிற வீதத்தில் நடக்க உள்ளது.
எனவே, அவரவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட முகாம்களில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் விண்ணப்ப படிவங்களை கொடுத்து வர வேண்டும்.
இதனுடன் மேலும் சில ஆவணங்களான ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, மின்கட்டண அட்டை மற்றும் வங்கி கணக்கு ஆகியவற்றையும் எடுத்து செல்ல வேண்டும்.
இதற்கான படிவங்களை வருகின்ற 23 ஆம் தேதிக்குள் 90 சதவிகிதம் விநியோகம் செய்யுமாறு திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சென்னையில் இந்த உரிமை தொகையை பெற மொத்தம் பத்து லட்சத்திற்கும் மேலாக மகளிர்கள் உள்ளதால் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு மூன்று பகுதிகளாக பிரித்து விண்ணப்பம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பம் மத்திய, தெற்கு, வடக்கு என மூன்று பகுதிகளில் நடைபெற இருக்கிறது என்று மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறி இருக்கிறார். இந்த விண்ணப்பங்கள் வழங்குவதற்கு எந்த ஒரு கால அவகாசமோ கிடையாது.