தமிழகத்தில் 6 மாவட்டங்களில் சிறப்பு கடன் முகாம்!! ஜூலை 15 முதல் தொடக்கம்!!
தமிழகத்தில் வருகின்ற ஜூலை 15 முதல் கிராம வங்கிகளின் சார்பாக சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம் ஜூலை 20 ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிராம வங்கிகளின் சார்பில் இந்த சிறப்பு முகாம் மொத்தம் 6 மாவட்டங்களில் நடத்தபட உள்ளது. இந்த முகாம்கள் வேலூர்,ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் இந்த சிறப்பு முகாம்கள் மூலம் விவசாயம் சார்த்த தொழில் கடன் ,சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மற்றும் மகளிர் சுய உதவிகுழு கடன் என்று அனைத்திற்கும் பயனுள்ள வகையில் இந்த முகாம்கள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து குறைந்த அளவில் உள்ள வீட்டு கடன் மற்றும் வாகன கடன்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிராம வங்கிகளின் சார்பில் நடத்தப்பட உள்ள இந்த சிறப்பு முகாம்கள் அனைத்தும் ஜூலை 15 ம் தேதி தொடங்க உள்ளது.
இந்த சிறப்பு முகாமில் வீட்டு கடன் ,விவசாய கடன், குறைந்த அளவில் ஆனா அடுக்குமாடி குடியிருப்பு கடன் , வாகன கடன் ,தொழில் நிறுவன கடன், வீடு புதிப்பிக்க கடன் ,வீட்டுமனை வாங்கி வீட்டு கட்ட கடன் போன்ற அனைத்திற்கும் கடன் வழங்கப்படும். இவ்வாறு பெறப்படும் அனைத்து கடன்களும் குறிப்பிட்ட மாதங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
மேலும் இது குறித்த அனைத்து தகவலையும் அந்த பகுதியில் இயங்கும் கிராம வங்கி கிளை மேலாளரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.