ஆகஸ்ட் மாதம் சிறப்பு ரயில்கள் இயக்கம்!! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது.
இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை பயன்படுத்தி வருகின்றன்னர்.
இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இதில் வழங்கப்படும் குறைவான விலை டிக்கேட்களால் கோடி கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.இது ஏராளமான பொதுமக்களுக்கு மிகவும் சவுகரியமாக அமைகின்றது.
மக்களின் வசதிக்காக ரயில்வே துறை சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.அந்த வகையில் பண்டிகை தினத்தையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்ட உள்ளது.
இந்த நிலையில் தற்பொழுது தாம்பரம் மற்றும் தூத்துக்குடி இடையே செயல்படும் பகுதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது .மேலும் பனிமய மாதா கோவில் திருவிழா காரணமாக ஆகஸ்ட் 5 ,6 ஆம் தேதிகளில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடி செல்ல உள்ளது.மீண்டும் அடுத்ததாக ஆகஸ்ட் 6 ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட உள்ளது.