SRH-ல் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்!! தக்கவைக்க இத்தனை கோடியா??

0
88
SRH's highest paid player!! So many crores to maintain??

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ பி எல் ன் 2025 ம் ஆண்டுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. கடந்த மாதம் ஐ பி எல் நிர்வாக குழு அடுத்த  ஏலத்திற்கான வீரர்களை தக்க வைத்து கொள்ள விதிகளை வெளியிட்டது. இந்த விதியின் மூலம் அணியின் உரிமையாளர்கள் தங்கள் முந்தைய அணிகளில் இருந்து ஆறு வீரர்களை தக்க வைக்க அனுமதி அளித்தது. மேலும் அணியின் ஏலத் தொகையை ரூ.120 கோடியாக உயர்த்தியது.

அதிகபட்சம் 5 கேப்டு வீரர்களையும் ,இந்திய அல்லது வெளிநாடு வீரர்கள் இருக்கலாம். மேலும் 2 அன் கேப்டு வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ளலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 வீரர்களை தக்க வைத்ததாக அறிவித்தது அதில் முதல் வீரராக தென்னாபிரிக்கா பவர் ஹிட்டரான  ஹென்ரிச் கிளாசென் ரூ.23 கோடி ரூபாய் பெறுவார் என்றும், தற்போது சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் ஆல் ரவுண்டர் பட கம்மின்ஸ் 18 கோடி ரூபாய் மற்றும் இந்திய ஆல் ரவுண்டர் அபிஷேக் ஷர்மா ரூ.14 கோடி ரூபாய் என்ற ஒப்பந்தங்களை உறுதி செய்துள்ளது.

இதற்கு முன் 2024 ஆம் ஆண்டு போட்டிகளில் ஹென்ரிச் கிளாசென் ரூ.5.25 கோடி தொகையும், பேட் கம்மின்ஸ் ரூ.20.5 கோடி தொகைக்கும், அபிஷேக் ஷர்மா ரூ.6.5 கோடிக்கும் ஏலத்தில் வாங்கப்பட்டனர். மேலும் 2025-லும் பேட் கம்மின்ஸ் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக நீடிப்பார் என அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் ஹென்றிச் க்ளாசன்.

இதுவரை மூன்று வீரர்களை தக்க வைத்துள்ளது அடுத்ததாக நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இரு வீரர்களை தக்க வைக்க போவதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்திற்கு முன் வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் காலக்கெடு அக்டோபர் 31 வரை என பிசிசிஐ அறிவித்துள்ளது.