Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இளம்பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் கைது

Arrested

Arrested

இளம்பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் கைது

 

இலங்கை கிரிக்கெட் அணியின் தனுஷ்கா குணதிலகாவை சிட்னி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக விளங்குபவர் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக இதுவரை 47 ஒருநாள் போட்டிகளிலும், 46 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்த இரு வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ள ஆல் ரவுண்டரான தனுஷ்கா குணதிலகா, இலங்கை அணி பெற்ற பல்வேறு வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனால் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கவிருந்த இலங்கை அணியில் இவரும் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக ஆஸ்திரேலியா வந்த அவர், போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் தொடரின் இடையே குணதிலகாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து விலகினார். இவருக்கு பதிலாக பண்டாரா இலங்கை அணியில் அணியில் சேர்க்கப்பட்டார். இவ்வாறு காயம் ஏற்பட்டாலும் அவர் இலங்கைக்கு திரும்பாமல் அணியுடன் அங்கேயே இருந்தார். இலங்கை அணிக்கு உற்சாகமளிக்கும் வகையில் அணியுடன் தொடர்ந்து பயணித்தும், வீரர்களுக்கு ஊக்களிக்க உதவியாகவும் இருந்தார்.

இந்நிலையில் நேற்று சிட்னியில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணியானது தோல்வியடைந்தது. இந்தப் போட்டிக்கு பின்னர் இலங்கை அணியை சேர்ந்த தனுஷ்கா குணதிலகா தீடீரென சிட்னி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து விசாரித்ததில் தனுஷ்கா குணதிலகா மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து சிட்னி போலீசார் கூறுகையில், இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா டேட்டிங் ஆப் மூலம் 29 வயது பெண்ணுடன் பழகி உள்ளார். இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி ரோஸ் பே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் இவர்கள் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அந்த பெண்ணை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக, அனுமதி இன்றி தன்னுடன் பாலியல் உறவு வைத்து கொண்டதாக பாதிக்கப்பட்ட அந்த பெண் சிட்னி போலீசில் புகார் அளித்தார் என்று கூறுகின்றனர்.

 

மேலும் இந்த புகார் தொடர்பாக சிட்னி போலீசார் குணதிலகாவை நேற்று கைது செய்தனர். கைது செய்து செய்யப்பட்ட தனுஷ்கா குணதிலகா இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

 

இதனிடையே, டி20 தொடரில் இருந்து வெளியேறி இலங்கை அணி தனுஷ்கா குணதிலகா இல்லாமலேயே சொந்த நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் சார்பாக விளையாட சென்ற கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா அங்கு பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version