Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாலியல் விவகாரம்… இலங்கை வீரருக்கு ஜாமீன் மறுப்பு… ஆஸ்திரேலிய சிறையில் அடைப்பு!

பாலியல் விவகாரம்… இலங்கை வீரருக்கு ஜாமீன் மறுப்பு… ஆஸ்திரேலிய சிறையில் அடைப்பு!

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் குணதிலக ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணிடம் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் தனுஷ்கா குணதிலகா. இவர் இலங்கை அணிக்காக 47 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 46 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் சமீபத்தில் ஆஸ்திரேலியா போலீஸாரால் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது கைதுக்கான காரணம் ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணிடம் அவர் அனுமதியின்றி உடலுறவு கொண்டதுதான் காரணம் என செய்திகள் வெளியாகின. குணதிலக,  டேட்டிங் ஆப் மூலம் 29 வயது பெண்ணிடம் பழகி வந்துள்ளார் என்று தெரிய வந்தது. கடந்த 2 ஆம் தேதி ரோஸ் பே நகரில் ஒரு தனியர் விடுதியில் சந்தித்து அந்த பெண்ணின் விருப்பமின்றி ஆணுறை அணியாமல் வற்புறுத்தி உடலுறவு கொண்டதாக அந்த பெண் புகார் செய்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து வழக்கு விசாரணை ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில் குணதிலகவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை அடுத்த ஆண்டு ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த செய்தி கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

குணதிலக, இதற்கு முன்னரும் இதுபோல பாலியல் ரீதியான புகார்களில் சிக்கியும், அவர் மேல் இலங்கை கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

Exit mobile version