இலங்கையின் வெற்றி ஆட்டம் தொடக்கம்!!  தடைகளை உடைக்கும் தலைமை பயிற்சியாளர் !!

0
104
Sri Lanka's win game begins!! Head coach who breaks barriers!!


மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது முதலில் டி 20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியும் இலங்கை ஒரு போட்டியும்  (1-1) என்ற நிலையில் சமநிலையில் இருந்தன.

யார் இந்த போட்டியில் கோப்பையை வெல்வார்கள் என  எதிர் பார்த்த வந்த நிலையில்  அக்டோபர் 17 அன்று  இறுதி போட்டியான மூன்றாவது போட்டி இலங்கையில் உள்ள ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி என்றாலே அதிரடி பட்டிங் என புகழ் பெற்ற அணி ஆனால் இலங்கையின் பந்து வீச்சை  சமாளிக்க முடியாமல் திணறியது. 20 ஓவர் முடிவுற்ற நிலையில் அணியின் எண்ணிக்கை 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி தொடக்க வீரர்களான குசல் மென்டிஸ் மற்றும் குசல் பெரேரா  இருவரும் அதிரடியாக பேட்டிங் செய்து அரை சதத்தை பூர்த்தி செய்தனர். குசல் மென்டிஸ் 68 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதனால் தொடரை 2-1 என்ற விகிதத்தில் வெற்றியை பதிவு செய்தது.

ஜெயசூரியா தலைமை பயிற்சியாளராக உள்ள இலங்கை அணி. அவரின் பயிற்சியின் கீழ் 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது, 10 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வென்றது, 15 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து உடனான டெஸ்ட் தொடரை வென்றது அதன் பின் இப்போது வெஸ்ட் இண்டீஸ் உடனான டி 20 தொடரை முதன் முறையாக வென்றுள்ளது. அதனால் ஜெயசூரியா தலைமையில் எழுச்சி பெற்று வருகிறது என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.