Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதல்!

#image_title

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதல்!

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்கதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் இரவு மீனவர்கள் 6 பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். கோடியக்கரை கடலில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 6 பேர் மீது திடீரென இரும்பு பைப்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். 

இந்த திடீர் தாக்குதலால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க விரித்திருந்த வலைகளையும் அறுத்து சேதப்படுத்திதாகவும் கூறப்படுகிறது. இலங்கை கடற்படை தாக்குதலில் 5 மீனவர்கள் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து மீனவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version