Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சட்டசபையில் உண்மையை போட்டுடைத்த ஸ்டாலின்!! இந்த கொலைக்கு காரணமே அதிமுக நிர்வாகி தான்!!

Stalin told the truth in the assembly!! AIADMK administrator is responsible for this murder!!

Stalin told the truth in the assembly!! AIADMK administrator is responsible for this murder!!

சட்டசபையில் உண்மையை போட்டுடைத்த ஸ்டாலின்!! இந்த கொலைக்கு காரணமே அதிமுக நிர்வாகி தான்!!

தற்பொழுது தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டசபையானது  வழக்கம்போல் கூடியது. முதலில் மறைந்த முன்னாள் அமைச்சர் என தொடங்கி பாடகர் வாணி ஜெயராம் உள்ளிட்டவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் இரு தினங்களுக்கு முன் கிருஷ்ணகிரியில் காதலர்கள் இருவர் காதல் திருமணம் செய்து கொண்டதால் மகளின் தந்தையே மகளுடைய கணவரை நடுரோட்டில் வெட்டி கொன்ற ஆணவப்படுகொலை குறித்து அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார்.

அவருக்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, சமீப காலமாக ஆணவபடுகொலை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இது போல் இனி நடக்காமல் இருக்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதுமட்டுமின்றி கொலை செய்த பெண்ணின் தந்தையானவர் அதிமுக கிளை செயலாளராக உள்ளார் என்பதையும் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறியதும் எதிர்க்கட்சி நிர்வாகிகள் கூச்சலிட்டு கோஷமிட ஆரம்பித்தனர்.

இவ்வாறு கூச்சலிட்டதும் சபாநாயகர் அப்பாவு மிகுந்த கோபம் அடைந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து தற்பொழுது கொலை செய்த பெண்ணின் தந்தையானவர் அதிமுக கிளை செயலாளர் இல்லை என்பதை எழுத்து வடிவத்தில் எழுதிக் கொடுக்குமாறு கூறிய பொழுதும் அவர்களின் கூச்சல் குறையவில்லை.

பின்பு அமைச்சர் துரைமுருகன் எழுந்து காவல்துறை விசாரணையின் அறிக்கையில் என்ன உள்ளதோ அதைத்தான் தற்பொழுது முதல்வர் கூறியுள்ளார் என தெரிவித்தார்.இவ்வாறு முதல்வர் அதிமுக கிளை செயலாளர் தான் ஆணவப்படுகொலையில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறியுள்ளது தற்பொழுது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version