Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“ஸ்டாலின் விட்ட டோஸ்” தாங்க முடியாமல் கதறிய அமைச்சர்!! என்னை அனைவரும் மன்னித்துவிடுங்கள்!!

stalins-vita-dose-cried-minister-forgive-me-everyone

stalins-vita-dose-cried-minister-forgive-me-everyone

“ஸ்டாலின் விட்ட டோஸ்” தாங்க முடியாமல் கதறிய அமைச்சர்!! என்னை அனைவரும் மன்னித்துவிடுங்கள்!!

திமுக அமைச்சர்களால் எப்பொழுதும் ஸ்டாலினுக்கு தலைவலியாக தான் உள்ளது. ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சியில் அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கி கொள்வதையே வழக்கமாக வைத்துள்ளனர்.இதிலிருந்து அவர்களை மீட்டு வருவதற்குள் ஸ்டாலின் ஒரு வழியாகி விடுகிறார். இதனையெல்லாம் கருத்தில் கொண்டு தான் ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். நீங்கள் பேசும் வார்த்தையில் கவனமாக இருங்கள் என்று கூறினார். ஆனால் இவர் கூறிய எச்சரிக்கை செவிடன் காதில் சங்கு ஊதியது போல தான் ஆகிவிட்டது.

மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்குவதையே இந்த அமைச்சர்கள் வேலையாக வைத்துள்ளனர். தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி இதர கட்சிகள் வெற்றி பெறுவதற்கு அடுத்தடுத்த ஆயத்த பணிகளுக்கான திட்டமிடுதலை தொடங்கியுள்ள நிலையில், ஸ்டாலினுக்கு அமைச்சர்களை சர்ச்சையில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதையே வேலையாக உள்ளது. அந்த வகையில் பண மோசடியில் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி குறித்த வழக்கானது பரபரப்பாக நடந்து வரும் வேளையில் அடுத்த பிரச்சனையை அமைச்சர் எ வ வேலு கொண்டு வந்து விட்டுள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டமானது மதுரையில் நடைபெற்றதையடுத்து அதில் அமைச்சர் எவ வேலு கலந்து கொண்டுள்ளார். இதில் ஸ்டாலின் மற்றும் கலைஞர் குறித்து புகழ்ந்து பேசினார். அவ்வாறு பேசுகையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உயர் நீதிமன்றத்தின் கிளையானது தென் மாவட்டங்களில் கொண்டு வர வேண்டும் என்பதாக இருந்தது. அதனடிப்படையில் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்டது தான் மதுரை உயர்நீதிமன்ற கிளை. இது அவர் போட்ட பிச்சை என சர்ச்சைக்குரிய விதமாக கூட்டத்தில் கூறினார்.

இவ்வாறு அமைச்சர், சென்னை உயர்நீதிமன்றம் கலைஞர் போட்ட பிச்சை எனக் கூறியதை கேட்டதும் அங்கிருந்து மக்கள் திகைத்து நின்றனர். அமைச்சர் இவ்வாறு பேசியது அதிமுக தலைமை காதிற்கு சென்றுள்ளது. சிறு வாய்ப்பு கிடைத்தாலே திமுகவை குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள் இதனை சர்வ சாதாரணமாக விடவில்லை.உடனடியாக கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இவ்வாறு அமைச்சர் பேசி உள்ளார் என்ற செய்தி ஸ்டாலினிற்கும் சென்றுள்ளது. உடனடியாக அவர் அமைச்சருக்கு அழைப்பு விடுத்து கடுமையாக திட்டியுள்ளார். இதனையடுத்து உடனடியாக திமுக அமைச்சர் நான் பேசியது தவறு உணர்ச்சிவசத்தில் கலைஞர் அளித்த கொடை என்பதற்கு பதிலாக பிச்சை என்று பேசி விட்டேன்.என்னை மன்னித்துவிடுங்கள் என கூறி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version